குடியாத்தம் அரசு மருத்துவமனையில் குப்பைகளை தினமும் நகராட்சி மூலம் அகற்ற வேண்டும்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தினமும் நகராட்சி மூலம் குப்பைகளை அகற்றவேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-08-25 16:48 GMT

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தினமும் நகராட்சி மூலம் குப்பைகளை அகற்றவேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலோசனை குழு கூட்டம்

குடியாத்தம் அரசு மருத்துவமனையின் ஆலோசனை குழு கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் ரவி, நத்தம் பிரதீஷ், நகரமன்ற உறுப்பினர்கள் எம்.சுமதி, ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், நவீன்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.மாறன்பாபு வரவேற்றார். குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஏ.நடராஜன், பூமாலைவாசு, துரைசெல்வம், சத்தியமூர்த்தி, முத்து உள்பட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குப்பைகளை அகற்ற வேண்டும்

கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியின் மேல் கருத்தரங்கு கூடம் அமைக்க வேண்டும், தினமும் அரசு மருத்துவமனையில் உள்ள குப்பைகளை நகராட்சி குப்பை வண்டி மூலம் அகற்ற வேண்டும், மருத்துவமனையின் சமையலறை பகுதியில் உள்ள கழிவுகளை உரமாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், நோயாளிகளின் தேவைக்காக 500 பெட்ஷீட் மற்றும் இரண்டு ஈ.சி.ஜி. மிஷின்கள் வழங்க வேண்டும், நோயாளிகள், குழந்தைகள் பொழுது போக்கிற்காக 3 டி.வி. பொருத்த வேண்டும், நோயாளிகளுக்கு 100 கொசுவலைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடனடியாக நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் சொந்த செலவில் 50 கொசுவலைகளை அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.

இந்த கூட்டத்திற்கு கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. பூவைஜெகன் மூர்த்தியை ஏன் அழைக்கவில்லை என நகர மன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளருமான பி.மேகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் குட்டிவெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அடுத்த கூட்டத்திற்கு கண்டிப்பாக அழைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்