மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

நெய்க்காரப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

Update: 2023-07-08 16:13 GMT

நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள், பழனி செல்லும் சாலையோரத்தில் உள்ள சர்க்கரை கவுண்டன்குளம் அருகே கொட்டப்படுகின்றன. தற்போது அங்கு மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சில நேரத்தில், மர்ம நபர்கள் குப்பைகளில் தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் கடும் புகைமூட்டம் எழுகிறது. இதன் காரணமாக பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி, கொழுமம் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே நெய்க்காரப்பட்டியில் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குப்பையோடு குப்பையாக, இறைச்சி கழிவுகளையும் சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அங்கு குளம் இருப்பதால் நிலத்தடி நீர் மாசுபட வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்