குப்பைகளை அரைக்கும் எந்திரம்

சீர்காழியில் குப்பைகளை அரைக்கும் எந்திரம் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது

Update: 2022-12-13 18:45 GMT

சீர்காழி:

கொசு மருந்து அடிக்கும் எந்திரம், பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கேஜ் செய்யும் எந்திரம் மற்றும் மக்கும் குப்பைகளை அரைக்கும் எந்திரம் ஆகியவை மக்கள் பயன்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சி சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுப்பராயன், சுகாதார அலுவலர் ராம்குமார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் வரவேற்றனார். இதில் கொசு மருந்து அடிக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட எந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன் தொடங்கி வைத்து ே்பசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்