தனியார் தொழிற்சாலையில் குப்பை கழிவுகளில் தீ விபத்து: 20 மணி நேரம் போராடி அணைத்தனர்

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் குப்பை கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை 20 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

Update: 2023-01-27 21:57 GMT

பாதிரிவேடு,

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து பல்வேறு மூலப்பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி செய்யும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகளை சுமார் 30 அடி உயரத்துக்கு மலை போல குவித்து வைத்து உள்ளனர்.

தீ விபத்து

நேற்று முன்தினம் இந்த கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமள வென பரவி கொளுந்து விட்டு விடிய விடிய எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நேற்று மாலை வரை சுமார் 20 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்தில் உயிர் சேதம் ஏதுவுமில்லை.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து எற்பட்டதா? அல்லது குப்பை கழிவுகளில் மர்ம நபர்கள் யாரேனும் தீயை வைத்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்