11 ஊராட்சிகளுக்குகுப்பைகள் சேகரிக்க தலா ரூ.9½ லட்சத்தில் வாகனம்சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்

குப்பைகள் சேகரிக்க தலா ரூ.9½ லட்சத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை 11 ஊராட்சிகளுக்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.;

Update: 2023-08-17 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நாரியப்பனூர், ராயப்பனூர், கூகையூர், வி.அலம்பலம், உலகங்காத்தான், தொட்டியம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தலா ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் டிராக்டர் டிப்பர்கள் வாங்கப்பட்டு, அதனை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சின்னசேலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, 11 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், பழனிவேல், ஒன்றிய பொறியாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்