குப்பை சேகரிக்கும் வண்டிக்கு தீ வைப்பு

பரப்பாடியில் குப்பை சேகரிக்கும் வண்டிக்கு மர்மநபர்கள் தீ வைத்துச் சென்றனர்.;

Update: 2022-12-26 20:24 GMT

இட்டமொழி:

பரப்பாடி ஆர்.சி. இலங்குளத்தில் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் இலங்குளம் பஞ்சாயத்துக்கு சொந்தமான 2 குப்பை அள்ளும் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை மர்ம நபர்கள் யாரோ நேற்று முன்தினம் இரவு தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன், வடக்கு விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து, குப்பை வண்டிக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்