குப்பை சேகரிப்பு தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கோட்டை மேலூர் பகுதியில் குப்பை சேகரிப்பு தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-02-26 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி மேலூர் 14-வது வார்டு பகுதிகளில் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் (எ) சுதன் தனது சொந்த செலவில் 12 குப்பை சேகரிப்பு தொட்டிகளை தனது வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் நிறுவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி செங்கோட்டை ெரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் எல்.எம்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் (எ) சுதன் வரவேற்றர். அதனைதொடா்ந்து வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பை சேகரிப்பு தொட்டிகளை நிறுவி அந்த பகுதி வாழ் பொதுமக்களிடம் குப்பைகளை ரோட்டில் கொட்டுவதை தவிர்த்து தொட்டிகளில் போடவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள், சுகாதார மேற்பார்வையாளா்கள் முத்துமாணிக்கம், காளியப்பன் பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்