உடுமலை அருகே நான்கு வழிச்சாலை ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-14 11:55 GMT

குடிமங்கலம்

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு வழிச்சாலை

பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறுக்கிடும் பகுதியில், உயர் மட்ட பாலங்கள் கட்டும் பணி உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பரியோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சியிலிருந்து, உடுமலை வழியாக திண்டுக்கல் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.முதல் கட்டமாக, திட்ட வடிவமைப்பு அடிப்படையில், உயரமாக மண் கொட்டப்பட்டு, பல வடிவ ஜல்லி கற்கள், இரு வழியாக பிரிக்கும் வகையில் ரோட்டோரங்களில் கான்கிரீட் தடுப்புகள், மையத்தடுப்பு பகுதி அமைக்கும் பணி நடைபெற்றது.பின்னர், ஓடுதளம் தார்ரோடாக அமைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இந்த நிலையில் உடுமலை அருகே நான்கு வழி சாலை பிரிவிலிருந்து சற்று தொலைவில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டி தீ வைத்துள்ளனர். தமிழகத்தில்பல நான்கு வழி சாலைகளில் ரோட்டோரத்தில் குப்பைகள் கொட்டுவது தொடர்கதையாகி வரும் நிலையில் பணிகள் நிறைவு பெறும் முன்னரே குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். நான்கு வழிச்சாலைகளில் குப்பைகளை கொட்டுபவர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்காணிக்க வேண்டும். நான்கு வழிச்சாலை ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினர் இரவு நேர கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---

2 காலம்

உடுமலை அருகே நான்குவழிச்சாலை ரோட்டோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்