கஞ்சா கடத்திய வழக்கு:2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை- கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-22 00:51 GMT


கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

21 கிலோ கஞ்சா

கடந்த 2021-ம் ஆண்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-எழுமலை இடையிலான சாலையில் கஞ்சா கடத்துவதாக எழுமலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அந்த சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெங்கசாமிபட்டி பஸ் நிலையம் அருகில் சந்தேகத்துக்கு இடமாக வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்ததுடன், இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி அம்மமுத்தன்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 43), சந்திரன் (41), லோகநாதன் (59) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜய பாண்டியன் ஆஜர் ஆனார்.

விசாரணை முடிவில், செல்வம், சந்திரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனால் அவர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் நேற்று தீர்ப்பளித்தார். லோகநாதன் விடுதலை செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்