ஏரிக்கரையில் கஞ்சா விற்றவர் கைது

ஏரிக்கரையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-14 17:42 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தின் ஏரிக்கரையில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில் செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதே கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமாரை கைது செய்த போலீசார் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்