கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-13 18:45 GMT

தேனி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் தேனி கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரெயில்வே கேட் திறக்கும் பணியாளர் அறைக்கு பின்புறம் கஞ்சா விற்பனை செய்ததாக கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த மகேந்திரபிரபு (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்