கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-02-15 18:45 GMT

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக, அந்த பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மகாகிருஷ்ணன் என்ற மந்திரி (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்