கஞ்சா விற்றவர் கைது
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவரை போலீசர் கைது செய்தனர்.
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் கம்பமெட்டு ரோடு 18-ம் கால்வாய் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி சாக்குப்பையுடன் நடந்து வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த கூல்பாண்டி மகன் பார்த்திபன் (வயது 47) என்பதும், கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.