கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-13 18:45 GMT

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் தலைமையிலான தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவில் அருகே, தூத்துக்குடி கணேசன் காலனியை சேர்ந்த ராஜபாண்டி மகன் நாராயணன் என்ற பன்னி நாராயணன் (42) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தாராம். உடனடியாக போலீசார் பன்னி நாராயணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் ரூ.2 ஆயிரத்து 700 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பன்னி நாராயணன் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்