கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிளாக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பொன்னுசாமி(வயது 50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.