கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-22 19:30 GMT

ஓசூர்:-

ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பேளகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற நபரை சோதனை செய்தனர். அப்போது, அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ராய் (வயது 36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மத்திகிரி அருகே பேளகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்தும், கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்