கஞ்சா விற்றவர் கைது

சோளிங்கர் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-19 18:31 GMT

சோளிங்கர்

சோளிங்கர் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சோளிங்கர் கீழாநெண்டை மோட்டூர் திருத்தணி மெயின் ரோட்டில் வசித்து வரும் முனுசாமி மகன் வெங்கடேசன் (வயது 30). இவர் வீட்டின் பின்புறம் முட்புதரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ரவி உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்ற வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்