கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-24 18:37 GMT

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி தலைமையிலான போலீசார் தவிட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா இருக்கூர் பகுதியை சேர்ந்த அக்பர்உசைன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்