பேட்டை:
பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் பேட்டை சத்யாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 43) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.