கஞ்சா விற்றவர் கைது
கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணசாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பரசுராமபுரம் தெருவை சேர்ந்த சேக் என்ற ஜூமாகான் (வயது 60) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், அவர்கள் விற்பனைக்காக 1.3 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். ஜூமாகான் இதுவரை கஞ்சா விற்ற வழக்கில் 12-வது முறையாக கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.