கஞ்சா விற்றவர் கைது

முத்துப்பேட்டையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-29 11:18 GMT

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை சிவராமன் ஸ்தூபி அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது ஜாம்புவானோடை மேலக்காட்டை சேர்ந்த பெரியசாமி (வயது42) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்