திருவாலங்காடு அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது
திருவாலங்காடு அருகே மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
வாகன சோதனை
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று சின்னம்மாபேட்டை ஊராட்சி அரிசந்திராபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட்டர் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தார். அப்போது போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் 1½ கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தை கண்டுபிடித்தனர்.
கைது
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கஞ்சா கடத்தியவர் சின்னம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் ஆனந்தன் மகன் சங்கர் (வயது 26) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் சங்கரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சங்கர் மீது அரக்கோணம், சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.