கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-08-01 14:03 GMT

கூடலூர்

கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் ஒரு கும்பல் கள்ளத்துப்பாக்கியுடன் 2 மூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்தது. அவர்களை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருக்கேஷ்வரன், பிரபாகரன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து கள்ள துப்பாக்கி, தோட்டாக்கள், டார்ச் லைட்டுகள், 50 கிலோ கடமான் இறைச்சி, கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்த பால்மேட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 38), பெரிய சூண்டியை சேர்ந்த மைக்கேல் (30), புஷ்பராஜ் (33), அருண் (26) ஆகிய 4 பேரை கைது செய்னர். இதில் கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புஷ்பராஜை கைது செய்ய கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்