6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழிக்குப்பழியாக பெயிண்டரை கொன்ற வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2023-10-16 17:03 GMT

திண்டுக்கல் கிழக்கு பகுதி தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளராக இருந்தவர் சரவணன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு பழிதீர்க்கும் வகையில், மாலைப்பட்டியை சேர்ந்த பெயிண்டர் முனீஸ்வரன் (வயது 29) என்பவர் கொல்லப்பட்டார். பட்டப்பகலில் வீடு புகுந்து முனீஸ்வரன் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அதுதொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். அதில் நாகல்நகரை சேர்ந்த மணிகண்டன் (27), நல்லாம்பட்டியை சேர்ந்த ராஜ் (23), பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த தினேஷ் (27), ஜம்புலியம்பட்டியை சேர்ந்த மாதவன் (27), பொன்மாந்துறையை சேர்ந்த ஸ்ரீரெங்கன் (27), குரும்பபட்டியை சேர்ந்த உதயகுமார் (19) ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார்.

இதை தொடர்ந்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த 6 பேரையும், தாலுகா போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்