4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-09-19 19:12 GMT

நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளையைச் சேர்ந்தவர் பேச்சிராஜா. இவர் முன்விரோதம் காரணமாக தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோடு சாய்பாபா கோவில் அருகில் கடந்த 6-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜவேல் (வயது 28), சுதர்சிங் (21), கரையிருப்பைச் சேர்ந்த அரிநாராயணன் (22), சுடலைமுத்து (65) ஆகிய 4 பேரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதனை கமிஷனர் அவினாஷ்குமார் ஏற்று, ராஜவேல் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்