3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-06-20 18:12 GMT

அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக் உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த சோபன் (வயது 23), கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் என்கிற ஜிந்தா டேவிட் (48), ரியாஸ் அஹமது (21) ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரன் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சோபன், ராஜ்குமார் என்கிற டேவிட் ஜிந்தா, ரியாஸ் அஹமது ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்