3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் வைரவசாமி (வயது 30). இவர் கடந்த 19-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இசக்கிமுத்து (29), காளிராஜ் (25), அங்குராஜ் (25) ஆகிய 3 பேரை சேர்ந்தமரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆகாஷ் அந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சமர்ப்பித்தார்.