3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-08-06 18:59 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை முயற்சி வழக்கு

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட திருப்புடைமருதூர் ஸ்ரீ பத்மநாபநல்லூரை சேர்ந்த இசக்கிபாண்டி என்ற விஜய் (22), கருத்தப்பாண்டி (31), ரெங்கசாமி (47) ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தியதால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், அம்பை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

இதைத்தொடர்ந்து இசக்கிபாண்டி, கருத்தப்பாண்டி, ரெங்கசாமி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் நேற்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்