2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆற்காட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
ஆற்காடு ஏரிக்கரை தெருவை சேர்ந்த கணேஷ்குமார், மதன்குமார், வினோத், விக்னேஷ், கெல்வின் உள்பட 6 பேர் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ஆற்காடு பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்கில் ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்பும் பொழுது, பெட்ரோல் பங்க் அருகே சிகரெட் பிடித்துள்ளனர். அப்போது அருகே மாதா கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றி அங்கிருந்தவர்கள் இவர்களை தாக்கியுள்ளனர். அதைத்தொடர்ந்து 5-ந் தேதி இரவு கணேஷ்குமார், மதன்குமார், வினோத், விக்னேஷ், கெல்வின் உள்பட 6 பேரும் மாதா கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விக்னேஷ் மற்றும் கெல்வின் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் குண்டர்தடுப்பு சட்டத்திலை கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.