பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 35). இவர் மீது வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த மாதம் கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரை தாக்கியது, கொலை முயற்சி வழக்கும் உள்ளது. எனவே இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம்அன்பரசு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவிடம் பரிந்துரை செய்தார். இது குறித்து அவர் கலெக்டருக்கு பரிந்துரைதார். அதை ஏற்று வேல்முருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.