என்ஜினீயர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவட்டார் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட என்ஜினீயர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-04-22 18:45 GMT

நாகர்கோவில், 

திருவட்டார் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட என்ஜினீயர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் கொலை

திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் கணவருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் பலத்த காயங்களுடன் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மூவாற்றுமுகத்தைச் சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயரான எட்வின் (வயது28) வீடு புகுந்து அந்த பெண்ணை கொடூரமான முறையில் தாக்கியது ெதரிய வந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து எட்வின் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்தநிலையில் எட்வினை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எட்வினை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்