தந்தை- மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான தந்தை- மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் கலையரசனை, தினகரன் மகன் அசோக்குமார் கத்தியால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து திமிரி போலிசார் வழக்குப் பதிவு செய்து தினகரன் (45), அவரது மகன் அசோக் என்கிற அசோக்குமார் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்தநிலையில் அவர்கள் இருவரையும் கும்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் தினகரன், அசோக்குமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் உள்ள இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான நகல் வழங்கப்பட்டது.