விநாயகர் கோவில்களை மீண்டும் அமைக்க வேண்டும்

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் விநாயகர் கோவில்களை மீண்டும் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-04-20 19:37 GMT

நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சங்கர் உள்ளிட்டவர்கள் நேற்று காலையில் மாநகராட்சி மேயர் சரவணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை சந்திப்பு பழைய பஸ்நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள பாக்ய விநாயகர், கல்யாண விநாயகர் கோவில், ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் பஸ் நிலையத்தில் மீண்டும் கோவில் அமைக்க இடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை கோவில் அமைக்க எந்த அடிப்படை பணிகளையும் தொடங்கவில்லை. எனவே மாநகராட்சி மேயர் தலையிட்டு பஸ் நிலையத்தில் கோவில்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்