வரம் தரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கடையம் வரம் தரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.;
கடையம்:
கடையம் தெற்கு தெருவில் அமைந்துள்ள வரம் தரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா 1-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேச பலி, சுமங்கலி பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாட்டை தொடர்ந்து விமானம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.