உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள ராஜ கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். இதைதொடர்ந்து அந்த கோவிலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எழுமலையில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் எழுமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராமங்களில் இருந்து விநாயகர் சிலையை கொண்டு வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் எழுமலையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்ல தலைமையில் எழுமலை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.