விநாயகர் சிலை ஊர்வலம்

வாசுதேவநல்லூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-09-20 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் இந்து முன்னணி, வியாபாரிகள், பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சி இணைந்து நேற்று முன்தினம் மாலை 23-ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தியது.

நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளரும், விநாயகர் கமிட்டி தலைவருமான சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். விநாயகர் கமிட்டி பொருளாளரும், இந்து முன்னணி நகர தலைவருமான ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மந்தை விநாயகர் கமிட்டி பொறுப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்றர்.

வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர் தவமணி, வாசுதேவநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமசிவன், வாசுதேவநல்லூர் பா.ஜனதா தெற்கு ஒன்றிய செயலாளரும், சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து தலைவருமான ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மந்தை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி நகரின் முக்கிய வழியாக வந்தது.

முன்னதாக செல்வ விநாயகர், சிவசக்தி விநாயகர், களஞ்சிய விநாயகர், வணிக விநாயகர், சக்தி விநாயகர், முப்புடாதி அம்மன் விநாயகர், பத்ரகாளியம்மன் விநாயகர் ஆகிய சிலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வரவேற்பு அளித்து பூஜைகள் நடத்தினர்.

பின்னர் அனைத்து சிலைகளும் நிட்சேபநதி ஆற்றின் படித்துறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்