விநாயகர் சிலைகள் ஊர்வலம்

செஞ்சியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-04 18:59 GMT

செஞ்சி, 

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி செஞ்சி பகுதியில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று மரக்காணம் கடலில் கரைப்பதற்காக செஞ்சி சத்திர தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் எதிரில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து இந்து முன்னணி மாவட்ட தலைவரும், செஞ்சி வட்ட விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பாளருமான சிவசுப்பிரமணியம் தலைமையில், தொழிலதிபர் வி.பி.என்.கோபிநாத் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து விநாயகர் சிலைகள் செஞ்சி பீரங்கி மேடு, தேசூர் பாட்டை, காந்தி கடை வீதி வழியாக செஞ்சி கூட்டுரோட்டுக்கு வந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் மரக்காணம் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட துணைதலைவர் யுவராஜ், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரித்விராஜ், பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,அரசு செய்தி பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மீனவராணி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், நகர தலைவர் தங்க ராமு, நகர பொதுச்செயலாளர் அமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், திருமாள், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்