விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
வேதாரண்யம் பகுதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.;
வேதாரண்யம்:
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டது.இதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 12 சிலைகள் உள்பட 17 விநாயகர் சிலைகள் வேதாரண்யம் பகுதியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.பின்னர் சன்னதி கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன.இதில் திரளானோர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.