பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்

சதுர்த்தி விழாவையொட்டி தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டன.

Update: 2023-09-16 00:15 GMT

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இந்து அமைப்புகள் சார்பில், கம்பம் நகரில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்படும். இதற்காக உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் லாரி மூலம் கொண்டுவரப்பட்டன. பின்னர் கம்பம் ரேஞ்சர் ஆபிஸ் சாலையில் உள்ள குப்பம்மாள் கோவில் வளாகத்தில் சிலைகள் இறக்கி வைக்கப்பட்டன. அந்த சிலைகளை நகரில் 57 இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்வதற்காக நிர்வாகிகளிடம் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்