விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு
கடையநல்லூரில், 30 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு
கடையநல்லூர்:
கடையநல்லூரில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் மேலக்கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால் குமந்தாபுரம், அச்சம்பட்டி உள்ளிட்ட 30 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்துள்ளனர். அந்த சிலைகளை பக்தர்கள் வழிபட்டனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அனைத்து சிலைகளும் அண்ணாமலை நாதர் பொய்கை குளத்தில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோன்று அச்சன்புதூர், வடகரை, பண்பொழி, சொக்கம்பட்டி, இடைகால் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.