சதுர்த்தி விழாவையொட்டிபிரமாண்ட அரங்குகளில் விநாயகர் சிலைபக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்

சதுர்த்தி விழாவையொட்டி, பிரமாண்ட அரங்குகளில் விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் இந்த அரங்கை ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

Update: 2023-09-19 19:45 GMT

தேன்கனிக்கோட்டை

சதுர்த்தி விழாவையொட்டி, பிரமாண்ட அரங்குகளில் விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் இந்த அரங்கை ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

பிரமாண்ட அரங்கு

விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது விநாயகர் சிலை ஊர்வலம் தான். அதிலும் விதவிதமான விநாயகர் சிலைகள் காலத்திற்கேற்ப நவீனமாக வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீராஜ மார்த்தாண்ட கணபதி பக்த மண்டலி சார்பில் ஆண்டுதோறும் சினிமா திரைப்படங்களை மையமாக கொண்டு அரங்கு அமைத்து விநாயகர் சதுர்த்தியை பலரும் வியக்க வைக்கும் வகையில் கொண்டாடுவது வழக்கம்.

இதுவரை அத்திவரதர், பாகுபலி, கே.ஜி.எப். போன்று அரங்கு அமைத்து விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி பிரபலமான காந்தாரா படத்தில் வருவது போன்று அரங்குகள் அமைத்துள்ளனர்.

தத்ரூபமாக வடிவமைப்பு

ராட்சத பன்றி (வராக உருவம்) முன்னங்கால்களுக்கு இடையே அரங்குக்குள் நுழைந்து சென்றால் படிக்கட்டுகளில் அமர்ந்து 10 அடி உயரத்தில் பஞ்சுருளி தேவன் 2 கைகளிலும் தீப்பந்தம் கையில் ஏந்தி இருப்பதை பார்க்க முடியும். அங்கிருந்து அடுத்த அரங்கிற்குள் சென்றால் காந்தாரா திரைப்படத்தில் மன நிம்மதியை தேடி காட்டிற்குள் செல்லும் ராஜா பழங்குடியின தெய்வமான பஞ்சுருளி தேவனை பார்க்கும் காட்சியை பக்தர்கள் தத்ரூபமாக உணரும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதற்காக சத்தத்துடன் சுருளும் பன்றியும் வலதுபுறமாக வந்து வந்து செல்லும் பஞ்சுருளி சாமி, அருள் வந்து ஆடும் பூசாரியின் உருவமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்