விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக செஞ்சி, திண்டிவனத்தில் இந்து முன்னணியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-16 17:01 GMT


செஞ்சி, 


செஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட தலைவர் எஸ்.வி சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பிரிதிவிராஜ் வரவேற்றார். விஷ்ணு ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் 250 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவது, மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

திண்டிவனம்

இதேபோல் திண்டிவனத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி இயக்கத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் டி.என்.கே.பிரபு தலைமை தாங்கினார். நகர தலைவர் ஏழுமலை வரவேற்றார். புதுச்சேரி கோட்ட தலைவர் சிவா சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்டார். கூட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, கோலாகலமாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக், நகர நிர்வாகிகள் வசந்த், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்