ஓசூர்
ஓசூர் பகுதியில் ஆண்டுதோறும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, ஓசூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பிலும் நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வரிசையில் சென்று வழிபட்டு சென்றனர்.
ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர்கோவில், உழவர் சந்தை பின்புறமுள்ள மவுனகுரு விநாயகர் கோவில், ஓசூர் என்.ஜி.ஓ.காலனியில் உள்ள செல்வகணபதி கோவில் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் வீடுகளிலும் பின்னர், கொழுக்கட்டை சுண்டல் மற்றும் உணவு வகைகளை சாமிக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக, கவுரி அம்மன் பண்டிகையும் நேற்று கொண்டாடப்பட்டது.