காந்திகிராம பல்கலைக்கழக மாணவர் சாவு

சாலையை கடந்தபோது கார் மோதியதில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர் பலியானார்.

Update: 2023-08-24 20:15 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் வீரகார்த்திக் (வயது 19). இவர், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.டெக்., (சிவில்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது பல்கலைக்கழகத்தில் 2-வது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 21-ந்தேதி இவர், தேர்வு எழுதுவதற்காக சிறுநாயக்கன்பட்டியில் இருந்து பஸ்சில் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அப்போது பல்கலைக்கழகத்துக்கு செல்ல திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையை வீரகார்த்திக் கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வீரகார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செமஸ்டர் தேர்வு எழுத வந்தபோது கார் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பல்கலைக்கழக மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பல்கலைக்கழகம் முன்பு நான்கு வழிச்சாலையில் இரும்பு தடுப்பு கம்பி (பேரிகார்டர்) வைக்கப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அங்கு இரும்பு தடுப்பு கம்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்