காந்திகிராம பட்டமளிப்பு விழா: குழு புகைப்படம் எடுத்துகொண்ட பிரதமர், கவர்னர் ,முதல் அமைச்சர்
விழாவில் பிரதமர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார் .பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் பிரதமர், கவர்னர் ,முதல் அமைச்சர் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்தனர்.