மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் காந்தி நினைவு தினம்

வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-01-30 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் மூலம் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் கு.தவமணி, காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சங்கர சுப்பிரமணியன், சிறப்பு ஆசிரியர்கள் ஆ.சாந்தி, ஹெலன், இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் மகேஸ்வரி, முத்துலட்சுமி, இயன்முறை மருத்துவர் சா.புனிதா, ஆயா கவிதா, மற்றும் பள்ளியின் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்