தேனியில் காந்திஜெயந்தி விழா

தேனியில் காந்திஜெயந்தி விழா நடந்தது.

Update: 2022-10-02 17:49 GMT


தேனி பழைய பஸ் நிலையத்தில் உள்ள காதி கிராப்ட் அங்காடியில் காந்திஜெயந்தி விழா மற்றும் தள்ளுபடி விலையில் கதர் ஆடைகள் விற்பனை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி தள்ளுபடி விலையில் கதர் ஆடைகள் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் முருகேசன், கதர் ஆய்வாளர் திருச்செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேனியில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கி காமராஜர் மற்றும் காந்தி உருவ படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட செயலாளர் குமரேச பாண்டி, மாவட்ட கவுரவ ஆலோசகர் மாரிமுத்து, மாவட்ட அமைப்பாளர் அய்யா காளை, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்