சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) அணி சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுவர்ணா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சின்னத்துரை, இளைஞர் பாசறை செயலாளர் சரவண பாண்டியன், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் சுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் அழகப்பா சாமி, மானூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், கடையநல்லூர் நகர பொறுப்பாளர் இசக்கி துரை, மாவட்ட பிரதிநிதி சிவசங்கர பாண்டியன், திருமலாபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மகேஷ் பூபதி, கடையநல்லூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்லத்துரை, சிவகிரி பேரூர் கழக செயலாளர் பெருமாள் பாண்டியன், நிர்வாகிகள் முத்தையா பாண்டியன், காசிராஜன், வெங்கடேசன், மணிகண்டன், ராஜ்குமார், தங்கராஜ், மணிமாறன், ஜெயராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.