கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.

Update: 2023-02-11 18:19 GMT

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. கபடி போட்டியில் 120-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. கபடி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று முதல் பரிசான ரூ.40 ஆயிரத்தை பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்