நாளை கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு காப்புகட்டி விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதி - இடம்பிடிப்பதில் போட்டா போட்டி

திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை 25-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் காப்புகட்டி கோவிலில் தங்கி இருந்து கடும்விரதம் இருக்க உள்ளனர். இடம்பிடிப்பதில் பக்தர்களிடையே போட்டா, போட்டி நிலவியது.

Update: 2022-10-23 17:45 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை 25-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் காப்புகட்டி கோவிலில் தங்கி இருந்து கடும்விரதம் இருக்க உள்ளனர். இடம்பிடிப்பதில் பக்தர்களிடையே போட்டா, போட்டி நிலவியது.

2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி கோவிலில் 7 நாட்கள் தங்கி இருந்து விரதமிருப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால்கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதி தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா நாளை (25-ந்தேதி) காலை 7 மணி அளவில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதி வேல்வாங்குதல், 30-ந்தேதி சூரசம்ஹார லீலை, 31-ந்தேதி சட்டத் தேர் கிரிவலம் நடக்கிறது.

போட்டோ, போட்டி

இதனையொட்டிகடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம்போல கந்தசஷ்டி திருவிழாவில் காப்புகட்டி கோவிலிலேயே 7 நாட்கள் தங்கி இருந்து கடும் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி விரதமிருக்ககூடிய பக்தர்களில் பெரும்பாலனோர் நேற்று காலையிலேயே கோவிலுக்குள் தங்கக்கூடிய இடத்தின் தரையில் வட்டமிட்டு தங்களது பெயர் மற்றும் ஊர் பெயரை எழுதி போட்டுக்கொண்டு இடம் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்